வழக்கம் போல் இது திமுக துதி பாடல் என்று நினைக்காமல் கீழே கொடுத்துள்ள தகவல்களை சரிபார்க்கவும்.
இந்தியாவின் 16 வது மக்களவை பொது தேர்தல் மே 16 2014 அன்று வெளியாகியது. அந்த முடிவுகளின் படி திமுக மூன்றாவது(1989, 1991, 2014) முறையாக ஒரு இடம் கூட பெறாமல் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் யாருக்கு நன்மை, யாருக்கு தீமை என்பது தான் இந்த பதிவின் உட்பொருள்.
எனக்கு அரசியல் தெரிய ஆரம்பித்த வருடம் 1989. அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் மட்டும் ஒரு இடம் பெற்றது திமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனால் அப்படி இருந்த போதும் வி.பி. சிங் அவர்கள் திமுகவின் முரசொலி மாறன் அவர்களை தனது அமைச்சரவையில் இணைத்துகொண்டார். அதுதான் தமிழக வளர்ச்சியின் முதல்படி என்று சொன்னால் மிகையாகது.
அந்த ஆட்சியில் தான் திமுக வின் கோரிக்கையை ஏற்று காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது[அதைதான் அம்மையார் பல்லில்லாத ஆணையம் என்று விளித்தார் ஆனால் இன்று அம்மையார் பொன்னியின் செல்வியாகி விட்டார்].
அதுமட்டும் அல்ல "இதர பிற்படுத்தபட்டோர்(OBC)" ஒதுக்கீட்டை பெற்று தந்த மண்டல் கமிஷன் அறிக்கையை திமுக மற்றும் மற்ற சமூக நீதி கட்சிகளின் துணையோடு நிறைவேற்றினார். அதை பொறுக்கமாட்டாமல் தான் பாஜக ராமர் கோயில் விஷயத்தை கிளப்பி தேசிய முன்னணி ஆட்சியை கவிழ்த்தது.
பின்பு 1991 ல் ராஜீவின் கொலைப்பழியால், திமுக ஒரு இடம் கூட பெற இயலவில்லை.
அதன் பின்னர் 1996 ல் நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஐக்கிய முன்னணியை உருவாகியது, பல ஆண்டுகளுக்கு பின் தமிழகத்திற்கு காபினெட் அந்தஸ்துள்ள பல அமைச்சர்கள் கிடைத்தார்கள். தமிழகத்திலும் திமுக ஆட்சியில் இருந்தது. என்னைப்பொருத்தவரை தமிழகத்தின் பொற்காலம் என்றால் அது நிச்சயமாக அந்த கால கட்டம் தான். இன்று நீங்கள் பார்க்கிற ஒவ்வொரு அடிப்படை கட்டமைப்பும் உருவானது அப்போதுதான். அதை தொடர்ந்து 2014 வரை (1998-1999) நீங்கலாக திமுக மத்தியில் இருந்தது அதனால் தான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று கூக்குரல் இட்டுக்கொண்டிருந்த நாம் நாம் இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளோம் (முதல் இரண்டு இடங்களை பெற்ற கேரளமும், ஹரியானாவும் ஏற்கனவே முன்னணியில் இருந்தவர்கள்).
இந்த காலகட்டத்தில் திமுக செய்த சாதனைகளின் பட்டியலை (http://dmkforpeople.com/?page_id=355) இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் சில அறிவாளிகள், 2009 போரின் போது தன் அரசியல் லாபங்களுக்காக காங்கிரசை ஆதரித்தது என்பது போன்று திமுகவின் மீது துரோகபட்டம் சுமத்துகிறார்கள். உண்மையில் ஒரு அரசாங்கம் உலக நாடுகளால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாக எப்படி செயல்பட முடியும். ஆனால் அந்த சூழலிலும் தன்னுடைய அழுத்தத்தால் இருமுறை போர் நிறுத்தம் செய்ய வழி ஏற்படுத்தி கொடுத்தவர் கலைஞர். சந்தேகம் இருந்தால்,சி.ஏ. சந்திரபிரேம என்ற பத்திரிகையாளர் எழுதிய “கோதா’வின் யுத்தம்” என்ற நூலை (http://eelamview.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/115/) படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதுமட்டும் அல்ல, மனித உரிமைமீறல்கள் பற்றிய ஐநா தீர்மானத்தில் இரண்டு முறை இலங்கைக்கு எதிராகவும், ஒரு முறை நடுநிலையாகவும் இந்தியா நடந்து கொள்ள காரணமே திமுக தான். அதுமட்டும் அல்ல இலங்கையை கண்டிக்கும் தீர்மானத்தை கொண்டுவர காங்கிரஸ் முயற்சித்ததும் திமுக வினால் தான் [அதைதான் பாஜக வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிராகரித்து விட்டன]. இலங்கை பிரச்சினையில் கொஞ்சமேனும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முடிந்தது திமுக வினால் மட்டுமே.சந்தேகம் இருந்தால் ராஜபக்சே வின் நண்பரும் இனிய வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா அவர்கள், ஐ நா தீர்மானத்தின் போது கலைஞரை சந்திக்க 3 மூத்த அமைச்சர்களை காங்கிரஸ் சென்னைக்குஅனுப்பிய போது, வெளிப்படையாக பாராளுமன்றத்தில் கண்டித்ததை நாடு அறியும்.
எனவே எந்த ஒரு விசயத்திலும் எதாவது ஒரு சிறு நன்மை ஏற்பட்டிருந்தால் அது திமுக வினால் மட்டுமே நடந்தது என்பது வரலாறு. எனவே தான் என் தலைப்பின் படி தேர்தல் முடிவு என்பது "தமிழக மக்களவை பங்களிப்பு முடிவு.." ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக