அது மே 16 மற்றும் 17 - 2014. இந்திய பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாள். தேர்தல் முடிவுகள் திமுக வுக்கு மிகப்பெரும் தோல்வியை கொடுத்திருந்தது. என் நண்பர்களில் சிலர் வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்கள், சிலர் ஏளனமாய் சிரித்தார்கள். சிலர் ஆறுதல் கூறினார்கள். ஏளனமாய் சிரித்தவர்களில் சில மகளிரும் அடங்கும். அப்படி அவர்கள் சிரித்தபோது அவர்கள் மேல் எனக்கு கோபம் வரவில்லை மாறாக பரிதாபம் தான் தோன்றியது.அது ஏன் என்பதற்கான விளக்கமே இந்த பதிவு.
நீதிக்கட்சிக்கு முன்னும் பின்னும்:
தமிழக வரலாற்றை நீ.மு/நீ.பி என்று இரண்டாக பிரிக்கலாம். நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மகளிர் சமூகத்தின் ஒரு அங்கமாகவே மதிக்கப்படவில்லை. அவர்கள் பண்ட மாற்று பொருட்களாக தான் பாவிக்கபட்டர்கள். சமூக நீதி என்ற கொள்கையை கொண்ட நீதிக்கட்சி (திராவிட இயக்கங்களின் முன்னோடி) முதன்முதலாக மகளிருக்கு வாக்குரிமையை 1921 ஆம் ஆண்டு வழங்கி முதல் அடியை தொடங்கிற்று. அதன் அடுத்த கட்டமாக தேர்தலில் நிற்க விதிக்கப்பட்ட தடை 1926 ல் நீக்கப்பட்டது. இதுதான் பெண்களுக்கு சமூகத்தில் வழங்கப்பட்ட முதல் அங்கீகாரம்.
இதன் அடுத்தகட்டம் தான் பெரியார் என்று தங்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அய்யாவால் 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டு மாநாட்டில் பெண்களுக்குச் சொத் துரிமையும், தொழில் நடத்தும் உரிமை யும், ஆசிரியர் பணியில் பெருமளவு வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற முடிவுகள் மேற் கொள்ளப்பட்டன. அய்யாவின் பெண்விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை. ஒன்று, அடிப்படைத் தேவைகள்(பெண்கல்வி, சொத்துரிமை, அரசுப்பணி, பெண்ணுரிமை); பிறிதொன்று, அகற்றப்படவேண்டியவை(குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு)
அய்யாவின் இந்த கொள்கைகளை நிறைவேற்றுவதென்பது அந்த காலத்தில் அவ்வளவு எளிதனானதல்ல. அதை அய்யாவின் தம்பியான கலைஞர் எவ்வாறு கையாண்டார் என்று பார்க்கலாம்.
இதன் அடுத்தகட்டம் தான் பெரியார் என்று தங்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அய்யாவால் 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டு மாநாட்டில் பெண்களுக்குச் சொத் துரிமையும், தொழில் நடத்தும் உரிமை யும், ஆசிரியர் பணியில் பெருமளவு வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற முடிவுகள் மேற் கொள்ளப்பட்டன. அய்யாவின் பெண்விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை. ஒன்று, அடிப்படைத் தேவைகள்(பெண்கல்வி, சொத்துரிமை, அரசுப்பணி, பெண்ணுரிமை); பிறிதொன்று, அகற்றப்படவேண்டியவை(குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு)
அய்யாவின் இந்த கொள்கைகளை நிறைவேற்றுவதென்பது அந்த காலத்தில் அவ்வளவு எளிதனானதல்ல. அதை அய்யாவின் தம்பியான கலைஞர் எவ்வாறு கையாண்டார் என்று பார்க்கலாம்.
பெண்கல்வி:
அன்றைய நிலையில் பெண்களுக்கு கல்வி கொடுப்பதென்பது எவ்வளவு கடினமான காரியம் என்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆவார். வயது வந்த பெண்களுக்கு பள்ளிகளில்அனுமதி இல்லாததால் பள்ளி வகுப்பறைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் கூட்டு மாட்டு வண்டியின் மூடப்பட்டிருக்கும் திரைச்சேலை வழியாக ஆசிரியர் நடத்தும் பாடங்களை கற்று தேறினார். ஆண்கள் மட்டுமே படித்து வந்த சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபோது அவர் மட்டுமே ஒரே பெண் மாணவர். இந்த நிலையிலிருந்த ஒரு சமூகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தர கலைஞரால் தீட்டப்பட்ட ஒரு அறிவுப்பூர்வமான திட்டம் தான் திருமண நிதியுதவித் திட்டம்.
குறிப்பாக 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப்
பெண்களின் திருமணங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி வழங்கும் மூவலூர்
மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தை முதல் முறையாக திமுக 1989-ல்
தொடங்கியது. பெண்கள் 10-ம் வகுப்பேனும் படிப்பதை ஊக்கப்படுத்திட வேண்டும்
எனும் உணர்வோடு 10-ம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு
1996-ம் ஆண்டு முதல் 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கியது. 2006-ல் 15,000 ரூபாய் என்றும், 2008-ல்
20,000 ரூபாய் என்றும், 2010-ல் 25,000 என்றும் படிப்படியாக உயர்த்தி
கிராமப்புறங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற வழிவகுத்தது. இந்த திட்டம் வரும் வரை பெண்களுக்கு கல்விக்கு செலவளிக்கபடும் நிதி தன் குடும்பத்திற்கு பயனளிக்காது என்ற எண்ணத்தை மாற்றி பெண் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. உதாரணத்திற்கு 90 களில் நான் படிக்கும் போது 4 ல் 1 பங்காக இருந்த பெண்களின் சதவீதம் சரிசமமாக உயர்ந்ததும் இந்த காலகட்டங்களில் தான். அது மட்டும் அல்ல, ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை கல்வி கற்க வகைசெய்திட வேண்டும் என்பதற்காக
1989-ல் ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப்படிப்புத்
திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அத்திட்டத்தின் பயன்களை 2008 முதல் முதுகலைப்
பட்டப்படிப்பு வரை நீட்டித்து செயல்படுத்தியவர் கலைஞர்.
சொத்துரிமை:
இந்தியாவிலேயே முதன்முறையாக 1990-ல் பெண்களுக்குப் பரம்பரைத் சொத்தில் சம உரிமை அளித்திடும் தனிச்சட்டம் கொண்டுவந்து ஆண்களுக்கு பெண் எந்த வகையிலும் தாழ்ந்தவள் அல்ல என்பதை உறுதிபடுத்திய தலைவர் கலைஞர். சரி பரம்பரை சொத்து இல்லாத பெண்களும் எந்த சூழ்நிலையிலும் பொருளாதார தேவைக்காக ஆணை சார்ந்து இருக்கும் தேவை இல்லாமல் தன சொந்த காலில் நிற்கவேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவரப்பட்டது தான் மகளிர் சுயஉதவிக் குழுக்கள். மகப்பேறு காலங்களில் வேலைக்கு செல்ல இயலாத அன்றாடம் காய்ச்சி பெண்களுக்கும் அந்த சூழ்நிலையிலும் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய தேவை ஏற்படாமல் காக்க கொண்டு வரப்பட்டது தான் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்.இந்த உதவித் தொகையில், முதல் தவணையாக ரூபாய் 4000/- கருவுற்ற ஏழாவது
மாதத்திலும், இரண்டாவது தவணையாக ரூபாய் 3000/- குழந்தை பிறந்த பின்பும் ,
பிரசவத்துக்குப் பின்னர் முத்தடுப்பு ஊசி செலுத்தியதும் 3-வது தவணையாக ரூ. 4
ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதோடு முடிந்து விடவில்லை. 50 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம்
500 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார்.
ஏழை விதவைப் பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், விதவைப் பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், 18 வயதிற்கு
மேற்பட்ட மகன் இருந்தாலும், முதியோர் உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கி யாருடைய கையையும் எதிர்பார்க்காத நிலையை உருவாக்கியவர் கலைஞர். அரசுப்பணி:
பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, வருமான வரியில் சலுகை, பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் இரண்டாம் வகுப்பு வரை முற்றிலும் பெண்களை ஆசிரியைகளாக நியமிக்க வேண்டும், ஆதிதிராவிட பெண்களுக்கு 1 கோடி ரூபாய்ச் செலவில் விமானப் பணிப்பெண் பயிற்சி வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களின் மூலம் பல லட்சகணக்கான மகளிர் பெரும் பயன் பெற்றுள்ளார்கள்.
பெண்ணுரிமை
கல்வி, சொத்து, வேலை என்று எல்லாம் இருந்தாலும் சமூகத்தில் ஆண்களுக்கு சமமாக வாழ, இந்தியாவிலேயே முதல்முறையாக 1996-ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித்
தேர்தல்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து; கிராம
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முதல் மேயர் பதவி வரை ஏறத்தாழ 40,000 மகளிர்
உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெற்று ஜனநாயகக் கடமை ஆற்றிடும் வாய்ப்பை
உருவாக்கித் தந்தவர் கலைஞர்.
குழந்தைத் திருமணம், மணக்கொடை மற்றும் கைம்மை வாழ்வு:
குழந்தைத்திருமணத் தடைச்சட்டத்தை, சாரதா சட்டம் என்று பரவ லாக அறியப்பட்டுள்ள செய்தியாகும். எனினும் அதற்குச் சாரதா சட்ட
ம் என்னும் பெயர் எப்படி வந்தது என்பது ஒருபுறமிருக்க, அதனை நிறைவேற்றுவ
தற்கு வெள்ளையர் அரசு எடுத்த முயற் சிகள் மற்றும் அதற்குத் துணையாக நின் ற
திராவிட இயக்கத்தின் செயல்பாடுக ள், இன்றைய தலைமுறை,
குறிப்பாகப் பெண்கள் அறிந்திடல் வேண்டும்.டாக்டர் முத்து லட் சுமி ரெட்டி போன்ற வர்கள் அம் முயற்சியில்
முன்னின்று பணியாற்றி, 1929 செப்டம்பர் 28 ஆம் நாள் அது சட்டமாக நிறைவேற்ற ப்பட்டது.
அதே போல் மணக்கொடை எனப்படும் வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கும் பொருட்டும், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு நிதி உதவி, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதியுதவி, அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித்
திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண
நிதியுதவித் திட்டம் ஆகிய திருமண உதவித் திட்டங்களின் நிதி உதவி போன்றவற்றை செயல்படுத்தி பெண்கள் வாழ்வில் ஒளி ஏற்றியது திமுக ஆட்சி.
அவலத்திலும் அவலமாக இருந்த, ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை பொட்டு கட்டி தேவதாசி(தேவடியாள்; தேவ + அடியாள் = தேவடியாள்) என்ற கேவலமான கடுமையாக எதிர்த்து போராடி தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டுவந்தது நீதி கட்சி.
பெண்களின் முன்னேற்றத்திற்காக இவ்வளவு செயல்களையும் செய்த ஒரு இயக்கத்தின் தோல்வியை பெண்களே எள்ளி நகையாடியது அவர்களின் மேல் ஒரு பரிதாபத்தை தான் வரவழைத்தது.
அதன் பின் தான் புரிந்தது தவறு எங்களிடம், மேலே சொல்லப்பட்டசெய்திகளை உங்களுக்கு கொண்டு செல்லாதது எங்களின் தவறுதானே?
அந்தக் குழந்தை மணத் தடைச் சட்டத்தைக் கொணர்ந்ந வெள்ளையரின் பெயர் Sarda... அதைச் சாரதாச் சட்டம் ஆக்கிவிட்டனர் லகுடபாண்டிகள்
பதிலளிநீக்குநல்ல கட்டுரை.